Subscribe via RSS Feed

அசின் அடித்த சூப்பர் பல்டி!

மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார் நடிகை ஆசின்.

இதுகுறித்து அவர் கூறுகையில் :

நடிகர் சங்க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் என் கவனத்துக்கு வந்தன. அந்த தீர்மானங்களை மனதார வரவேற்கிறேன். நான் ஒரு நடிகை தொழில் ரீதியாகத்தான் இலங்கை சென்றேன். நடிகர் சங்கத்தலைவரிடம் எனது நிலைப்பற்றி ஏற்கனவே விளக்கி விட்டேன். இலங்கை சென்றதற்காக என்னை பலர் விமர்சித்தனர்.

நடிகர் சங்க பொதுக்குழுவில் தனிப்பட்ட முறையில் இலங்கை செல்லும் கலைஞர்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் போட்டது ஆறுதலாக உள்ளது. இனிமேல் இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இனி நடிகர் சங்கத்தின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்ல மாட்டேன்.

நடிகர் சங்கத்தினரை எதிர்ப்பது போல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லாததை செய்தியாக வெளியிடுவது முறையல்ல என்று கூறியுள்ளார் ஆசின். மன்னிப்பு கேட்க, நான் என்ன தவறு செய்தேன் என்று தனது முந்தைய பேட்டியின்போது ஆசின் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Tags: , , , , ,

Category: 2. சினிமா, திரை நிகழ்வுகள்

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.