Subscribe via RSS Feed

சிக்கல் மேல் சிக்கலில் “காவல் காதல்”

விஜய் நடிப்பில் சித்திக் இயக்கும் படம் “காவல் காதல்”. இதில் அசின் நடித்துள்ளார். தமிழ் படங்கள் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டுகின்றன. வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, விஜய்யின் “காவல் காதல்” படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளது. இதில் 30 தமிழ் அமைப்புகள் உள்ளன. இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோம் என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பிரிட்டன், கனடா நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்காகவோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ இலங்கைக்கு செல்லக்கூடாது என்று திரையுலகில் சிலர் கூறிவருகின்றனர். அப்படி தடுப்பது தவறு என இன்னொரு தரப்பு கூறுகிறது. இந்த விஷயத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தலையிட்டு, இலங்கை செல்லும் நடிகர் நடிகைகளின் படங்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். “முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள படத்தை புறக்கணிப்போம்”  என அமெரிக்க தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் முடிவால் விஜய் படத்தை அங்கு திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் அஜீத் இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போல இணையதளத்தில் தகவல்கள் பரவின. அவரது படத்தை புறக்கணிப்பதாக வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள் அறிவித்தன. அஜீத் விளக்கம் தந்தார். இலங்கை தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்திலும் பங்கேற்றார். இதையடுத்து அவர் படங்கள் மீதான தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: , , , , ,

Category: 2. சினிமா, திரை நிகழ்வுகள்

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.