சிறையிலுள்ள சீமானுக்கு தூது அனுப்பிய விஜய்!
இளையதளபதி விஜய் தனது நெருங்கிய உறவினர் ஒருவரை அனுப்பி சிறையிலிருக்கும் சீமானை பார்த்து வரச்சொல்லி தூது அனுப்பியிருக்கிறார். நாம் தமிழர் இயக்கத் தலைவரும், திரை இயக்குனருமான சீமான், திரையை காட்டிலும் அரசியலில் தீவிரமாக இருந்து வருகிறார். போராட்டம், கைது, சிறை என்று சீமானின் வேகம் குறையவில்லை. இத்தனை பரபரப்பான அரசியலுக்கு நடுவே விஜய் நாயகனாக நடிக்க இருக்கும் பகலவன் படத்தை இயக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வந்தார்.
வேலாயுதம் படத்தில் நடித்து முடித்தபிறகு இந்தப்படத்தை கலைபுலி தாணு தயாரிப்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க எண்ணி, படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளையும் முடித்திருந்தார். இந்நிலையில்தான் இராமேஷ்வரம் மீனவர் படுகொலையில் மூன்று பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்திருக்கிறது. இதன் காரணமாக வேலாயுதம் படத்துக்குப் பிறகு சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பாதாக இருந்த படத்திட்டம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தனக்காக கதை எழுதி தயாராக வைத்திருக்கும் லிங்குசாமிக்கு அடுத்த வாய்ப்பை கொடுத்துவிடலாமா , உங்கள் எண்ணம் என்ன? என சீமானை நேரில் பார்த்து முடிவை தெரிந்துவரும்படி தனது உறவினரை அனுப்பியிருகிறார் விஜய்.
மேலும் சீமானை சந்திக்கும் போது “அவருக்கு என்ன உதவி தேவை; எதுவாக இருந்தாலும் செய்யத்தயார்” என்ற செய்தியையும் சொல்லி அனுப்பினாராம் விஜய். சீமானோ “தாராளமாக லிங்குசாமிக்கு வாய்ப்பைக் கொடுங்கள், விரைவில் எனக்கு நல்ல சூழல் அமையும்; அப்போது நாம் பகலவனை உருவாக்குவோம்” என்று பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்.
சீமானின் கருத்தை அறிந்த விஜய் 70 நாட்களில் படத்தை முடித்து விட முடியுமா என்று லிங்குசாமியிடம் கேட்டிருப்பதாக நம்பக வட்டாரங்கள் தகவல் தெறிவிக்கின்றன. காரணம் நவம்பர் மாதம் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க ஒப்புகொண்டிருகிறார் விஜய். “3 இடியட்ஸ்” படத்துக்குப் பிறகு சீமானா இல்லை விக்ரம் கே.குமாரா என்பதை விஜய் முடிவு செய்வார் என்கிறார்கள். சீமான் இனி சிறைவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் இனி அவரது ஒவ்வொரு நகர்வும், புத்திசாலித்தனமாக இருக்கும் என்கிறார்கள் நாம் தமிழர் வட்டாரத்தில்.
வெல்க தமிழ்!
Category: 2. சினிமா, திரை நிகழ்வுகள்














Nice post and this mail helped me alot in my college assignement. Thank you seeking your information.